அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல்

🕔 March 5, 2024

யர் பதவிகளை வகிக்கும் அரச அதிகாரிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருவது தொடர்பில் எழுந்துள்ள கவலைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கொண்டு வந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய சபாநாயகர்; உயர் பதவிகளை வகிக்கும் அரச உத்தியோகத்தர்களை எந்தவித அடிப்படையும் இன்றியும், பல்வேறு சந்தர்ப்பங்களில் சரிகாண முடியாத காரணங்களுடனும் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்தார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக அத்தகைய அதிகாரிகளின் உத்தியோகபூர்வ முடிவுகள் மற்றும் பணிகளை விமர்சிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

“இவ்வாறான அடிப்படையற்ற அறிக்கைகள் – மேற்படி அரச அதிகாரிகளின் நற்பெயரையும் தொழில் கௌரவத்தையும் கெடுக்கும். மேலும் மேற்படி அதிகாரிகளுக்கு அவ்வாறான அறிக்கைகள் தொடர்பில் பதிலளிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்பதை நான் அவதானிக்கிறேன். எனவே, அவர்கள் கடுமையான அநீதிக்கும் ஊக்கமின்மைக்கும் ஆளாகிறார்கள்” என்றும் சபாநாயகர் கூறினார்.

மேலும், அவ்வாறான அறிக்கைகள் தொடர்பில் தமது ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தி – அந்த அதிகாரிகள் தமக்கு எழுத்துமூலம் முறைப்பாடுகளை செய்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

“அரசு அதிகாரிகள் தொடர்பில் விமர்சனங்கள் இருப்பின், அவர்களை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து அவ்வாறான விடயங்கள் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க முடியும்., எனவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்”.

“அதிகாரிகள் மீது சுமத்தப்படும் அவதூறான அல்லது தவறான அறிக்கைகள் ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: முஷாரப் எம்.பியின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்