
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று – இன்று ( 29) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



