பாடகர் சோனு நிகமை விமான ஒலிபெருக்கியில் பாட அனுமதித்த ஊழியர்கள் பணி நீக்கம்

🕔 February 5, 2016
Sonu nigam - 03விமானத்துக்குள் அறிவிப்பு வெளியிடும் தகவல் மையம் மூலமாக பிரபல இந்திய பாடகர் சோனு நிகமை பாட வைத்தமை தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான பணிப்பெண்கள் உள்ளடங்கலாக 05 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவின் ஜோத்பூரில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் பிரபல பாடகர் சோனு நிகம் பயணம் கடந்த மாதம் 04 ஆம் திகதி பயணித்தார். இதை கவனித்த சக பயணிகள், சோனு நிகமை பாடுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து, அவர் பாடுவதை அனைவரும் கேட்பதற்கு வசதியாக  விமானத்திற்குள் தகவல்  அறிவிப்பை வெளியிடும் ஒலிபெருக்கி வழியாக சோனு நிகம் பாட அனுமதிக்கப்பட்டார். விமானத்திற்குள் சோனு நிகம் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு இந்திய விமான போக்குவரத்து பணியகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  விமானத்தில் ஒலிபெருக்கியினூடாக சோனு நிகம் பாடுவதற்கு உதவியாக இருந்த பணிப்பெண்கள் உள்பட ஐந்து பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களிடம்  விசாரணை நடத்துவதற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

சோனு நிகம் – தமிழில் பாடிய ஏராளமான பாடல்கள் பிரபலமானவையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்