துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்: நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

🕔 February 27, 2024

மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று (27) நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்குள் தனது சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பல நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்த நிலையில் – இன்று தான் கடமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்