ஷிரந்தி தொடர்பில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு, மஹிந்த ராஜபக்ஷ அலுவலகம் மறுப்பு
மஹிந்த ராஜபக்வின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதம விகாரதிபதி முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் நிராகரித்துள்ளது.
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பல ஓய்வூதியங்களை பெற்று வருவதாக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதம விகாரதிபதி வலஹஹெங்குனாவெவே தம்மரதன தேரர் கூறியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வலஹாஹெங்குனவெவே தம்மரதன தேரர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இதனைக் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த கூற்றுக்களை வன்மையாக நிராகரிப்பதாகவும், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஓய்வூதியம் அல்லது அரசாங்க கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.