ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார்: என்ன காரணம்?

🕔 February 16, 2024

க்கிய மக்கள் சக்தி கட்சியை அரசியல் ரீதியாக பாதிக்கும் வகையில், அந்தக் கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் காரணமாக, அவரை – கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை தவிசாளர் பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சரத் பொன்சேகா கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்று குறித்த வட்டார்களிடம் கேட்கப்பட்டபோது, அவரை கட்சியிலிருந்து நீக்குவது வழக்கு தொடர்பான செயல்முறைக்கு வழிவகுக்கும் என்றும், ஆனால் அவரை தவிசாளர் பதவியில் இருந்து நீக்க கட்சியின் தலைவருக்கு உரிமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா எச்சரிக்கைகளை மீறி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைமையை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

மட்டுமன்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அண்மையில் சரத் பொன்சேகா பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். இனையடுத்து அவர் எந்த நேரத்திலும் அரசாங்கத்துடன் இணைவார் என்ற ஊகங்கள் ஏற்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்