தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பணிப்பாளர்கள் மூவர் ராஜிநாமா

🕔 February 13, 2024

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து சட்டத்தரணி மனோஜ் கமகே ராஜிநாமா செய்துள்ளார்.

இதற்கான கடிதத்தை இன்று (13) அவர் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக சட்டத்தரணியாக பணியாற்றியதாகவும், பணிப்பாளர் என்ற வகையில், நிறுவனத்தில் நிலவிய பல குறைபாடுகளை சீர்செய்வதற்கு உரிய தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும் மனோஜ் கமகே கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து மேலும் இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.

Comments