திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்

🕔 February 12, 2024

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் இன்று (12) அதிகாலை திருட முற்பட்ட இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் – கடையில் காசாளராகப் பணிபுரியும் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் – கடையிலிருந்த பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த காயமடைந்த பெண் – ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments