சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

🕔 February 4, 2016

National flag - Srilanaka - 011சுதத்திர தின தேசிய நிகழ்வில் சற்று முன்பாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவரும் நிலையிலேயே, காலி முகத்திடலில் நடைபெற்றுவரும் சுதந்திர தின தேசிய நிகழ்வில், தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டால், ஜனாதிபதிக்கெதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரும் வகையிலான குற்றமாக அது அமையும் என்று, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின தேசிய நிகழ்வில் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவருமான ரா. சம்பந்தன் போன்ற பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீடியோ: நன்றி – ஹிரு TV

Comments

புதிது பேஸ்புக் பக்கம்