
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தரமற்ற தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை 09 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அமைச்சர் சென்றிருந்தார்.
இதனையடுத்து, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.



