ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியல்வாதிகளுக்கும் வேண்டும்: ரொஷான் ரணசிங்க எம்.பி

🕔 January 31, 2024

றுபத்தைந்து வயதுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகி, அதன் மூலம் நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுவேன் என – நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரச துறையில் விதிக்கப்பட்டுள்ள ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியலிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“நமது வரலாற்றிலுள்ளது போல், ஓர் ஆளுநருக்கு 80 வயதாக இருக்கும் போது, அவர் தனது கடமைகளைச் செய்யும் மன உறுதி கொண்டவராக இருப்பாரா? எனவே, எனது அரசியல் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்து 65 வயதுக்கு முன்னர் ஓய்வு பெற நான் தயாராக உள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments