பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி

🕔 February 3, 2016

Gottabaya rajapakse - 098பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாக, பரவலாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவ்விடயம்ட தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நையாண்டித்தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், “இடது – வலது எனக் கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும் திறமை அவருக்கு இருக்கின்றமையினாலா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளது” என்று கோட்டா, நையாண்டித்தனமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முடிந்தது, வலது – இடது என கூறி ராணுவத்துக்கு ஆணையிடுவது மட்டுமே எனவும், அரசியல் கண்ணோட்டம் இல்லை எனவும், இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா என்பவர் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் எனவும், அவருக்கு நாடாராளுமன்ற பதவியை வழங்குவது தனக்கு பிரச்சினை இல்லை எனவும், அது அரசியல் கட்சி மூலம் எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலேய அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

28000 வாக்குகளை மட்டும் பெற்ற பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது அந்தக் கட்சிக்கு பிரச்சினை இல்லையாயின், தனக்கும் பிரச்சினை இல்லை எனவும் அவர் இதன்போது  குறிப்பிட்டுள்ளார்.

ராணுவத்தில் கோட்டாபயவுக்கு தெரிந்தது வலது – இடது மட்டுமே என கூறியவர்கள் பொன்சேகாவுக்கு அதற்கு மேலதிகமாக தெரியும் என நம்பவுவதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்