நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கான தடை உத்தரவு நீடிப்பு

🕔 January 22, 2024

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரம் தொடர்பில் தவறான பரிந்துரைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கக் கூடாது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 22) மேலும் நீடித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று காலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ள நிலையில், பிரதிவாதிகளு்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றினைச் சமர்ப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகரவிற்கு எதிரான தடை உத்தரவை முதலில் ஜனவரி 08 ஆம் திகதி – கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான பிறப்பித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்