லஞ்சம் பெற முயற்சித்த மருதமுனை அரச உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

🕔 January 21, 2024

பாறுக் ஷிஹான்

தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை வழங்கும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா  லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்கள  உத்தியோகத்தர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  உணவகம் ஒன்றில் வைத்து, சந்தேக நபரான உத்தியோகத்தர், தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை வழங்கும் பொருட்டு, நபர் ஒருவரிடம்  ரூபா 10 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக்கொள்ளும் போது, கொழும்பில் இருந்த வருகை தந்த லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை (18) உணவகம் ஒன்றில் வைத்து, லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்படார்.

மருதமுனை 5ஆம் பிரிவு, காரியப்பர் வீதியை சேர்ந்த  இப்ராஹிம் லெப்பை அப்துல் நஷார் (வயது-54) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபர், ஏற்கனவே குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டமையின் காரணாக, அரச சேவையில் இடைநிறுத்தப்பட்டு – பின்னர் சேவையில் இணைக்கப்பட்டதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்