அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர்

🕔 January 17, 2024

ரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு – நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிட வேண்டியுள்ளது என, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட பாடசாலையொன்றில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

மேலும் இன்றைய நிலையில், கல்விக்கான கட்டணம் – நாட்டில் அத்தியாவசிய செலவாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“பொதுவாக ஒரு பிள்ளையின் பிரத்தியே வகுப்புகளுக்காக 20,000 ரூபாய் செலவிடப்படுகிறது. நம் நாட்டில் 5.7 மில்லியன் குடும்பங்கள் உள்ளன. அந்த வகையில் பெற்றோர்கள் கல்விக்காக சுமார் 122 பில்லியன் ரூபா வரையில் செலவிடுகிறார்கள்.

மொத்தக் கல்விச் செலவீனத்தில் 402 பில்லியன் ரூபாய் – நாட்டிலுள்ள பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பணவீக்கத்தை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்