பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

🕔 January 16, 2024

னாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை தீர்மானிப்பதா அல்லது வேட்பாளரை முன்னிறுத்துவதா என்பது குறித்து, பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே எனத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ; “வேட்பாளரை நிறுத்துவது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக மேலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது,” என்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடிமட்ட மக்களின் விருப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடிமட்டத்தில் கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நிகழ்வில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்