நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி

🕔 January 13, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக – நாடாளுமன்றில் நேற்று (12) கேள்வியெழுப்பினார்.

நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரின் தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமே அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ? நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும்.முடிந்தால் நாடாளுமன்றத்தில் கூறுங்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் – ஜனாதிபதி உட்பட அரசாங்கம் தேவையற்ற செலவுகளைச் செய்வதாகவும் அனுரகுமார திஸாநாயக கடுமையாகச் சாடினார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி 14 மாதங்களாகின்ற நிலையில் 14 வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளமை குறித்தும் ஜே.வி.பி தலைவர் கேள்வியெழுப்பினார்.

”2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது? ஏன் மேலதிகமாக 2000 லட்சம் ரூபா குறை நிரப்பு பிரேரணை ஊடாக கோரப்படுகின்றது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” எனவும் அவர் இதன்போது கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்