ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி

🕔 January 3, 2024
அல் – அரூரியின் தாயார் – அல் ஜசீராவுக்கு பேட்டி வழங்குகிறார்

ஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சலே அல் – அரூரியின் மரணத்தால் தாங்கள் வருத்தமடைவதாகவும், ஆனால் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்ததாகவும், அவரின் குடும்பத்தினர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அல் – அரூரியின் தாய் மற்றும் சகோதரிகளை அல் ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண்டுள்ளது.

இதேவேளை, லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் சலே அல் – அரூரி கொல்லப்பட்டமைக்கு, இஸ்ரேல் இதுவர அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், குறைந்தது ஆறு பேரைக் கொன்ற தாக்குதல் “தண்டனை இல்லாமல் கடந்து செல்லாது” என்று ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.

ஒக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 22,185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 57,000 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்பான செய்தி: ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்