உலக சனத்தொகை 2024 தொடக்கத்தில் எத்தனையாக இருக்கும் என அறிவிப்பு

🕔 December 30, 2023

லக மக்கள்தொகை 2023ஆம் ஆண்டு 75 மில்லியனால் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளளது. இதேவேளை, 2024 புத்தாண்டு தினத்தில் உல சனத்தொகை 08 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும்.

2023ஆம் ஆண்டு உலக மக்கள் வளர்ச்சி விகிதம் 0.95% ஆக பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமையன்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் இந்தத் தரவுகளை வெளியிட்டது.

ஜனவரி 1, 2024 அன்று கணிக்கப்பட்ட உலக மக்கள் தொகை 8,019,876,189, 2023 ஆக இருக்கும்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகளவில் ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்புகளும் இரண்டு இறப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்