பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

🕔 December 18, 2023

காஸாவில் பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘காஸா மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக உணவு மற்றும் தண்ணீரை மறுத்து வருகிறது’ என – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக, அந்தக் கண்காணிப்பகத்தின் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பணிப்பாளர் ஒமர் ஷாகிர் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரிகள், தானிய ஆலைகள், தண்ணீர் வசதிகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்தல், பட்டினியை போரின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கான கொள்கையைப் பிரதிபலிக்கின்றன என்றும், இது வெறுக்கத்தக்க போர்க்குற்றம் எனவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் தளததில் பதிவிட்டுள்ளார்.

காஸாவில் பசியின் அளவு அதிகரித்து வருவதாக நேற்று அல் ஜசீரா செய்தி வெளியிட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்