ஷானிக்கு உயிர் அச்சுறுத்தல்: போதுமான மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 December 14, 2023

யிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் – உரிய பாதுகாப்பை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (14) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு – மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஆகிய இருவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்