கேர்னல் உட்பட தமது 10 படையினர் காஸாவில் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அறிவிப்பு

🕔 December 13, 2023
ஹமாஸிடம் பிடிபட்ட இஸ்ரேலிய படை சிப்பாய் – கோப்புப்படம்

டக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு மேற்கே அல்-ஃபலூஜா பகுதியில் உள்ள ஷாதியா அபு கசாலா பாடசாலைக்குள் இறந்த உடல்கள் குவிந்து கிடப்பதை, தாம் பெற்றுக் கொண்ட பிரத்யேக வீடியோ மற்றும் படங்கள் வெளிக்காட்டுவதாக, அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் கொலானி (Golani) தரைப் படைப்பிரிவின் முன்னோக்கிய தளத்திற்கு தலைமை தாங்கிய கேர்னல் உட்பட அதன் 10 வீரர்கள் செவ்வாயன்று காஸா பகுதியில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் இன்று அறிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, மத்திய காஸாவில் 15 இஸ்ரேலிய படையினர் மீது ஏனைய ஆயுதம் தாங்கிய போராளிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் கூறுகிறது.

“அல்-குத்ஸ் படைப்பிரிவுகளுடன் 15 சியோனிசப் படையினருடன் நாங்கள் பதுங்கியிருந்து மோதியதோடு, அவர்களில் ஒருவரைப் பிடித்தோம்” என்று, டெலிகிராம் சேனலில் ஹமாஸ் பதிவிட்டுள்ளது.

“நாங்கள் படையினரைக் கொன்று காயப்படுத்தினோம், அதன் பிறகு அல்-கஸ்ஸாம் பீரங்கி மற்றும் அல்-குட்ஸ் படையணிகள் அதிக திறன் கொண்ட மோர்டார்களால் அப்பகுதியை அழித்தோம்” எனவும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

அல்-குத்ஸ் பிரிகேட்ஸ் என்பது – பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் ஆயுதப் பிரிவு ஆகும்.

மறுபுறமாக காஸாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடர்வதால் மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி – ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கட்டுப்பாடற்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஒக்டோபர் 07 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 18,412 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்