நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

🕔 December 11, 2023

லங்கை சுற்றுலாத் துறை இவ்வருடம் 11 மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதனால்1.8 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவின் படி, 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஜனவரி முதல் நொவம்பர் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் வருமானத்தில் 78.3% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நொவம்பர் 2023 இல் சுற்றுலா மூலம் 205.3 மில்லியன் டொலர்கள் வருவாய் பெறப்பட்டுள்ளது. இது நொவம்பர் 2022 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பு வருமானமாகும்.

நாட்டிற்குள் அதிக விமான சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டதே சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்