காஸாவில் 36 சதவீதமான குடும்பங்கள் ‘கடுமையான பசியை’ அனுபவிப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவிப்பு

🕔 December 10, 2023

காஸாவில் 36 சதவீத குடும்பங்கள் இப்போது ‘கடுமையான பசியை’ அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அண்மைய கணக்கெடுப்பு ஒன்றில் – ஒவ்வொரு மூன்று குடும்பங்களில் ஒரு குடும்பம் கடுமையான பசியை அனுபவிப்பதாக – சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டறிந்துள்ளதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் “காஸா பகுதியில் செல்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லை” என, காஸா சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 7 முதல் காஸாவில் குறைந்தது 17,700 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 48,800 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில், திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சுமார் 1,147 ஆக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்