உப பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்; தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

🕔 December 6, 2023

ப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றி வந்த நிலையில், இவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்றும், இது தொடர்வில் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட நிலையத்திற்கு வந்திருந்த போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் 54 வயதான ருவன் குமார என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments