அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின

🕔 December 5, 2023

ரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட, மனவுணர்வை மாற்றக் கூடிய போதைப் பொருட்களை – மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில், இலங்கை சுங்கப் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்பெறுமதி 43 மில்லியன் ரூபாயாகும்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், மத்திய அஞ்சல் பரிவர்தனை நிலையத்தில் சிறப்புக் கண்காணிப்பை மேற்கொண்டமையைத் தொடர்ந்து, வார இறுதியில் ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராச்சியத்தில் இருந்து அனுப்பப்பட்ட 25 பொதிகளைக் கண்டறிந்து – அவ்றில் போதைப் பொருட்களைக் கைப்பற்றினர்.

அந்த பொதிகளில் 1.74 கிலோ எடையுள்ள ‘குஷ்’ என்ற கஞ்சா ரகமும், மெத்தம்பெட்டமைன் மருந்தைக் கொண்ட 2,193 எக்ஸ்டசி மாத்திரைகளும், 29 கிராம் ஆம்பெட்டமைன் மருந்து வகைகளும் இருந்தன.

கொழும்பு, பத்தரமுல்லை, மஹரகம, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெறுநர்களுக்கு இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் போலியான முகவரிகள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் சிரேஷ்ட பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

மத்திய அஞ்சல் பரிவர்தனை நிலையத்தின் தபால் திணைக்கள அதிகாரிகளுடன் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலயில், கடத்தல் பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்