மோசடியான கல்வி நிலையம் நடத்தி, பட்டங்கள் வழங்கி வந்த பெண் கைது

🕔 December 5, 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக, பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொவம்பர் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் கொலேஜ் ஆஃப் எஜுகேஷன்’ இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து – குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தேவையான போலி டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த பெண், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்களை ஈர்த்து, ஒன்லைன் வகுப்புகளை நடத்தி, படிப்பு முடிந்தவுடன் போலி டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

சரியான உள்ளூர் அல்லது சர்வதேச தரத்தை பின்பற்றாமல் நிறுவனத்தை நடத்திய போதிலும், தாம் வழங்கும் பட்டங்களு சந்தேக நபர் 01 லட்சம் ரூபாய் முதல் 445,000. ரூபாய் வரையில் பெற்றுள்ளார்.

சந்தேக நபர் மற்றும் நிறுவனத்துக்கு எதிராக மொத்தம் 43 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், 1000க்கும் அதிகமானோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

கல்வி நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை கைது செய்ய – பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்