புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து

🕔 February 1, 2016
Emil kanthan - 01விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தவருமான எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை ஆகியவ்றறினை கொழும்பு விசேட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

புலிகளுக்கான நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் கீழ், சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த எமில் காந்தனின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு விசேட நீதிமன்ற நீதிபதி ஐராங்கணி பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைகளில் பிரசன்னமாகி சாட்சியமளிக்க, எந்த வேளையிலும் எமில் காந்தன் தயாராகவுள்ளார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

எனினும், எமில் காந்தனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணை மற்றும் பிடியானை ஆகியவை பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால், அவரால் நாட்டுக்கு வந்து சாட்சியமளிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாக அவரது சட்டத்தரணி விசேட நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், எமில் காந்தனுக்கு எதிரான சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை ஆகியவற்றினை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துதார்.

புலிகளுக்கும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், நிதி கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் எமில் காந்தன் பிரதான வகி பாத்தினைக் கொண்டவர் எனக் கூறப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்