காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீடிப்பு

🕔 November 30, 2023

காஸா போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் (ஏழாவது நாளாக) நீடிக்கப்பட்டுள்ளது என – இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுவிக்கும் செயல்முறையைத் தொடர மத்தியஸ்தர்களின் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏழாவது நாளாக போர் நிறுத்தத்தை நீடிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஹமாஸ் தனி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று காஸாவில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு நாட்களுக்கு அந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேலும் ஒருநாள் (ஏழாவது நாளாக) போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவில் இருந்து 16 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு கைதிகள் நேற்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர். மறுபுறம் 30 பாலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர் கைதிகள் இன்று வியாழக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Comments