காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை

🕔 November 28, 2023

காஸாவில் சுகாதார அமைப்பை சரி செய்யாவிட்டால், குண்டுத் தாக்குதல்களால் அங்கு ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமான உயிரிழப்பு – நோயால் ஏற்படக் கூடும் என, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க கட்டார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் தோஹா சென்றதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. எகிப்திய உளவுத் தலைவரும் கட்டார் சென்றதாகவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே நான்கு நாட்கள் போர் நிறுத்தம் திங்கட்கிழமை முடிவடிந்தநிலையில், இன்று செவ்வாய்கிழமை தொடங்கி மேலும் 48 மணி நேரம் சண்டையை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கைதிகள் பரிமாற்றம் தொடரவுள்ளது.

கைதிகள் பரிமாற்றத்தின் நான்காவது கட்டத்தில் முப்பத்து மூன்று பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 11 இஸ்ரேலிய கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

காஸாவில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

ஒக்டோபர் 7 முதல் காஸாவில் 15,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்