காஸா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தொடுகிறது: இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்

🕔 November 3, 2023

ஸ்ரேலில் பணிபுரிந்த காஸாவைச் சேர்ந்த 3,000 பலஸ்தீனர்கள் போர் தொடங்கியதையடுத்து, சொந்த இடங்களுக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளர்..

ஒக்டோபர் 7 க்குப் பிறகு பெருளவான கைதுகள் மற்றும் பிரச்சாரத்தின் மத்தியில் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இது இவ்வாறிருக்க காஸா நகரை சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ள நிலையில், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஐந்து பேர் ஜெனின் புதியைச் சேர்ந்தவர்கள்.

ஒக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 9,227 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3,826 குழந்தைகளும் 2,405 பெண்களும் அடங்குவதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை இஸ்ரேல் தாக்குதல்களில் 32,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்