காஸாவுக்குள் சுரங்கப் பாதைகளைத் தேடுவதாக இஸ்ரேல் தெரிவிப்பு: டாங்கிகளை தாக்கியழித்ததாக ஹமாஸ் அறிவிப்பு
இஸ்ரேலிய படையினர் காஸாவுக்குள் – டாங்கிகள் மற்றும் புல்டோசர்களை, கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் செலுத்தி, ஹமாஸ் போராளிகள் மற்றும் சுரங்கப்பாதைகளைத் தேடி வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் வடமேற்கு காஸாவில் முன்னேறிய இஸ்ரேலிய டாங்கிகளை தாங்கள் தாக்கியதாகவும், அதே நேரத்தில் ஒரு கட்டடத்திற்குள் இருந்த இஸ்ரேலியப் படையை வெளியேற்றியதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
போர்நிறுத்தத்துக்கான அழைப்புகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிராகரித்ததால், முற்றுகையிடப்பட்ட பகுதி முழுவதும் குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
ஒக்டோபர் 07 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் – காஸாவில் குறைந்தது 8,525 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவேளை இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்ததாகவும், இஸ்ரேல் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவ திட்டமிட்ட மற்றொரு போராளி குழுவை தாக்கியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.