ஹமாஸ் கடத்திய ஷானி லுக், சித்திரவதை செய்யப்பட்டு மரணம்: இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

🕔 October 30, 2023

மாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஷானி லுக் (Shani Luk) எனும் 23 வயது யுவதி மரணித்து விட்டதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெர்மன் – இஸ்ரேல் இரட்டைப் பிரஜாவுரிமயைக் கொண்ட இந்த யுவதியின் மரணம் உறுதிசெய்யப்பட்டதை பகிர்ந்து கொள்வது பேரிடியாக அமைந்துள்ளதாக, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு – தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

‘ஒரு இசை விழாவில் இருந்து கடத்தப்பட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளால் சித்திரவதை செய்யப்பட்ட ஷானி லுக், புரிந்துகொள்ள முடியாத பயங்கரங்களை அனுபவித்தார்’ என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஹமாஸ் கடத்திச் சென்ற 200க்கும் அதிகமானோரை எங்கே வைத்திருக்கிறார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் – இதுவரை வெளியார் எவருக்கும் தெரியாது.

ஆனாலும், மேற்படி யுவதியை – ஹமாஸ் அமைப்பினர் சித்திரவரை செய்து கொன்றார்கள் என தாங்கள் கூறும் விடயம், எவ்வகையில் உறுதிசெய்யப்பட்டது என்பதை, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு விவரிக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்