“ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது”: அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

🕔 October 28, 2023

மாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது” என்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் “காசாவில் பூமி அதிர்ந்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை காஸாவுக்குள் தனது தரைப்படைகள் சண்டையிட்டு வருவதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், தனது போராளிகள் பல்வேறு இடங்களில் இஸ்ரேலிய துருப்புக்களை எதிர்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காஸாவில் தொலைத் தொடர்புகள் முற்றாக இழக்கப்பட்டுள்ளமையினால், அங்குள்ள தமது ஊழியர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

இதேவேளை காஸாவில் 01 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீன் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பெரும் திகிலுடன் வாழ்கின்றனர் என்று மனிதாபிமான குழுவான ‘சேவ் த சில்ரன்’ கூறுகிறது.

ஐ.நா. பொதுச் சபை போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை அங்கிகரித்துள்ள நிலையிலேயே காஸானுள் பெருமெடுப்பில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஒக்டோபர் 07 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 7,703 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்