மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

🕔 January 30, 2016

Rohan welivitta - 0987முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றப் புனாய்வுப் பிரிவினர் இவரை இன்று காலை அவரின் நாரஹேன்பிட்ட வீட்டில் வைத்து செய்து கைது செய்ததாகத் தெரியவருகிறது.

சி.எஸ்.என். ஊடக வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடு நடவடிக்கையில் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சி.எஸ்.என். ஊடக வலையமைப்பு நிறுவனமானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்