உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி

🕔 January 30, 2016

World record - 022
லங்கை துறைமுக அதிகாரசபையின் பணியாளரொருவர், உலக சாதனையொன்றினை மேற்கொள்ள முயற்சித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜானக காஞ்சன முதலிநாயகே எனும் 31 வயதுடைய இளைஞரொருவர் தனது வயிற்றின் மேல், தொடர்ச்சியாக 10 வாகனங்களை ஓட விட்டு, கின்னஸ் சாதனையொன்றினை ஏற்படுத்தும் முயற்சியொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஈடுபபட்டார்.

கொழும்பு துறைமுக நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், துறைமுக, கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, சாதனை முயற்சியினை மேற்கொள்ள முயற்சித்தவரின் வயிற்றின் மேல் இரண்டு வாகனங்கள் ஓடிய நிலையில், மூன்றாவது வாகனத்தை ஏற்றுமாறு சமிக்ஞை காட்டுவதற்கு முன்பாக,  வாகனம் ஏற்பட்டதோடு, இளைஞரின் வயிற்றுப் பகுதியில் வைத்தவாறே வாகனத்தை அதன் சாரதி தவறுதலாக நிறுத்தியும் விட்டார்.

இதனால், உடல் ரீதியான பாதிப்புக்குள்ளான மேற்படி இளைஞர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்