இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு

🕔 October 26, 2023

ணயக்கைதிகளாக காசாவில் ஹமாஸ் வைத்துள்ளவர்களில் சுமார் 50 பேர் – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவான ‘அபு உபைதா’வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என, ‘ஸ்கை நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே 22 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவரான காலித் மீஷால், ‘ஸ்கை நியூஸ்’ஸிடம் கூறியிருந்தார்.

ஹமாஸிடம் 224 பணயக் கைதிகள் உள்ளனர் என, இஸ்ரேல் இன்று (26) காலை தெரிவித்தது.

இருந்த போதும், ‘ஸ்கை நியூஸால்’ இந்த புள்ளி விவரங்கள் எதையும் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என, அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 07ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் போராளிகள் – அங்கு தாக்குதல் நடத்தி விட்டு, நூற்றுக்கணக்கானவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வந்தனர்.

இவர்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட இருவருரையும், இஸ்ரேலைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் இதுவரை ஹமாஸ் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தமது வசமிருந்த பணயக் கைதிகளில் இ/ஸ்/ரேலியப் பெண்கள் இருவரை – தாம் விடுவிப்பதை ஹ/மாஸ்/ வீடியோவாக வெளியிட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்