காஸாவில் உயிரிழப்பு 07 ஆயிரத்தை தாண்டியது: 45 சதவீத வீடுகள் அழிவு

🕔 October 26, 2023

காஸாவில் 3,000 குழந்தைகள் உட்பட 7,028 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

காஸாவிலுள்ள சுமார் 45 சதவீத வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள 1.4 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் மொத்தம் 101 சுகாதார பணியாளர்கள் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள்.

50 அம்பிலன்ஸ்கள் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் அரைவாசி தொகையளவு சேவையில் இல்லை.
மேலும் வடக்கு காஸாவில் உள்ள 24 வைத்தியசாலைகளை காலி செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்குபேட்டர்களை நம்பியிருக்கும் குறைந்தது 130 பிறந்த குழந்தைகள் – இப்போது மின்சாரம் இல்லாததால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர்.

காஸாவில் ஒரு நாளைக்கு சுமார் 166 பாதுகாப்பற்ற பிரசவங்கள் நடக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்