பிரபல வர்த்தகரும், இலங்கையின் மூன்றாவது பிரதமரின் மருமகனுமான லலித் கொத்தலாவல மரணம்

🕔 October 21, 2023

பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமானார்.

நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமாகும் போது அவருக்கு 85 வயது.

அவர் செலிங்கோ குழுமத்தின் தலைவர் என்பதுடன், செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லூரியில் படித்து, பட்டயக் கணக்கியலை அவர் ஐக்கிய ராச்சியத்தில் நிறைவு செய்தார்.

இவர் இலங்கையின் மூன்றாவது பிரதம மந்திரி சேர் ஜோன் கொத்தலாவலையின் மருமகன் ஆவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்