பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு

🕔 October 13, 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் – மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர்  நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரின் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

அந்த நீடிப்பு முடிவடைந்த பின்னர், ஜுன் 09ஆம் திகதி தொடக்கம் இரண்டாவது சேவை நீடிப்பு மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 09ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது சேவை நீடிப்புக் காலம் நிறைவு பெற்ற நிலையில், அவருக்கு மூன்றாவது தடவையாக மூன்று வாரங்களைக் கொண்ட மற்றொரு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்