வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

🕔 October 13, 2023
காஸாவிலிருந்து பாதுகாப்பான இடம்நோக்கிச் செல்லும் பலஸ்தீனியர்கள்

டக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ் கோரியுள்ளது.

“உங்கள் வீடுகளில் உறுதியுடன் இருங்கள் . ஆக்கிரமிப்பால் நடத்தப்படும் இந்த அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்” என்று, அகதிகள் விவகாரங்களுக்கான ஹமாஸ் அதிகாரச சபை இன்று (13) வெள்ளிக்கிழமை பிரதேசத்தின் வடக்கில் வசிப்பவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நூறாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் காசா நகரம் உட்பட வடக்கு காசாவை காலி செய்யுமாறு, இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

காசாவின் எல்லையை இஸ்ரேல் முற்றிலுமாக மூடிவிட்டதால், பலஸ்தீனியர்கள் தெற்கே வெளியேற முடியும்.

04 லட்சம் பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்திருக்கிறது,

உயர்ந்த உத்தரவு

இந்த நிலையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வடக்கு காசாவை விட்டும் வெளியேற்றுமாறு இஸ்ரேலிய ராணுவம் அழைப்பு விடுத்திருப்பது ஒரு “உயர்ந்த உத்தரவு” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குடிமக்களுக்கு ‘நியாயமான எச்சரிக்கையை’ கொடுக்க இஸ்ரேல் முயற்சிப்பதை அமெரிக்கா புரிந்துகொள்கிறது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

மரண தண்டனை

இதேவேளை காஸாவுக்கான இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவு – வைத்தியசாலையிலுள்ள பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு “மரண தண்டனை” ஆகும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவின்படி வைத்தியசாலையிலுள்ள பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளை 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றுவது சாத்தியமில்லை என்று காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்று, உலக சுகாதார அமைப்பின் ஊடகப் புச்சாளர் தாரிக் ஜசரேவிக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்