ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, பொதுஜன பெரமுன எம்.பி தம்மிக பெரேரா தயார்

🕔 October 10, 2023

டுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாக பிரபல வர்த்தகரும், பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் 51 சதவீத வாக்குகளையாவது முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது வேட்புமனு தொடர்பாக பெரும்பான்மையான அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ கடந்த வருடம் அவரின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

அவர் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது உரிமையின் கீழ் உள்ள சுமார் 18 முன்னணி நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்