ஹமாஸ் – இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது

🕔 October 9, 2023

மாஸ் – இஸ்ரேல் தரப்பினருக்கிடையில் நடந்து வரும் சண்டையில் 1100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ரோய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியத் தரப்பில் 700 பேர் பலியாகியுள்ளனர். அதேவேளை 130 பேரை ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்றுள்ளனர். இவர்களில் ராணுவத்தினர் மட்டுமன்றி பொதுமக்களும் அடங்குகின்றனர்.

ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் காஸா பகுதியில் 20 குழந்தைகள் உட்பட 413க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் என, காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தெற்கு இஸ்ரேலில், ஹமாஸ் போராளிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் சண்டையில் ஈடுபட்டனர். அவர் ரொக்கட் தாக்குதின் பின்னர் இஸ்ரேலிய ராணுவத் தளங்களைக் கைப்பற்றி எல்லை நகரங்களையும் தம்வசப்படுத்தினர்.

இதேவேளை காஸா பகுதியை நோக்கி தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும் காஸா பாதுகாப்பு வேலைக்கு அருகாமையில் 01 லட்சம் ராணுவத்தினரை இஸ்ரேல் குவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்