இலங்கைக்கு புதிய தலைவர் தேவை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

🕔 October 5, 2023

லங்கைக்கு புதிய தலைவர் தேவை என – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

“நீங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறீர்களா?” என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, “இல்லை. நான் ஆட்சி செய்தது போதும் என்று நினைக்கிறேன். முன்னோக்கிச் செல்வதற்கு புதிய தலைமை தேவை” என, அவர் கூறினார்.

“தற்போது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தப் பிரச்சினையை தூக்கிப் பிடிப்பீர்களா? நீங்கள் மக்கள் பக்கம் இருக்கிறீர்களா?” என ஊடகவியலாளர் தொடர்ந்து கேள்வியெழுப்பியபோது, “இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு உதவுவது அவசியம் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறியுள்ளோம். நிச்சயமாக, அன்று முதல் நாங்கள் பொதுமக்களின் பக்கம்தான் இருந்தோம்”எனவும் அவர் குறிப்பிட்டார்.

“உண்மையைச் சொல்வதானால், உங்கள் ஆட்சியில் நிலைமை மிகவும் சிறப்பாக இருந்தது, மக்கள் இவ்வளவு சிரமத்தை எதிர்கொள்ளவில்லை” என, ஊடகவியலாளர் கூறியபோது, “அது உண்மைதான். அது முற்றிலும் சரியானது” என்றும் மஹிந்த பதிலளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்