பெற்றோல், டீசல் விலை இன்று மாலை முதல் அதிகரிப்பு

🕔 October 1, 2023

சினொபெக் தமது எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று (01) மாலை மாலை 6.00 மணி முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருகிறது.

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாய்.

டீசல் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை 358 ரூபாயாகும். சுப்பர் டீசல் விலை 417 ரூபாயாக இருந்த நிலையில் 61 ரூபா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 478 ரூபாய்.

92 ஒக்டேன் பெற்றோல் விலையில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

Comments