மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

🕔 January 28, 2016

Nishantha Wickremasinghe  - 012ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று வியாழக்கிழமை காலை, பாரிய நிதி மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

நிஷாந்த விக்ரமசிங்க – ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில், அங்கு  நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

பாரிய நிதி மற்றும் மோசடிகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு, நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு கடந்த 22 ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஷபக்ஷவின் சகோதரர் ஆவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்