ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் அறிவிப்பு

🕔 September 21, 2023

னாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஜனாதிபதியின் பதில் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையவை அல்ல எனவும், அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான செயற்பாடு எனவும் பதில் ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

(ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்