சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

🕔 January 28, 2016

Gnanasara Thero - 012
வெ
லிக்­கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞான­சார தேரர், அவ்­வப்­போது சிறைச்சாலை அதி­கா­ரி­க­ளுக்கு தர்ம உப­தேசம் செய்வதாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது.

ஞான­சார தேரரை வேறு கைதிகள் இல்­லாத, எவரும் இல­குவில் நுழைந்து விட முடி­யாத பிரத்தியேக இடத்­தி­லேயே வைத்­துள்­ள­தா­கவும் பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு நிலை­மை­களை கருத்தில் கொண்டே இவ்­வாறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் நிஸான் தன­சிங்ஹ தெரி­வித்துள்ளார்.

சிறைச் சாலை உள்­ளக தக­வல்­களின் அடிப்­ப­டையில்  கல­கொட அத்தே ஞான­சர தேரர்  வெலிக்கடை சிறை  வளா­கத்தில் உள்ள, கொழும்பு விளக்­க­ம­றியல் சிறை ‘எச்’ பிரிவில் உள்ளார் என்றும், தேரரின் பாவ­னைக்­காக நிலத்தில் மெத்தை ஒன்று போடப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தெரிவிக்கப்ப­டு­கி­றது.

நேற்று புதன்கிழமை சிறைச்­சா­லையில் வழங்­கப்­பட்ட காலை உண­வினை ஞான­சார தேரர் ஏற்றுக் கொண்­ட­தா­கவும்,  பகல்  அவரைப் பார்க்க வந்த பிர­மு­கர்கள் வழங்­கிய உண­வினை அவர் பெற்றுக்கொண்­டார் என்றும் சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.

இந் நிலையில் ஞான­சார தேரர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதால் வெலிக்­கடை சிறைச்­சாலை வளாகத்­திலும் பாது­காப்பு நேற்று அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. வெலிக்கடை சிறை வளாகத்துக்குள் நுழையும் அத்தனை வாகனங்களும் தீவிர சோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்