லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

🕔 September 4, 2023

லிட்ரோ எரிவாயுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அறித்து, லாஃப்ஸ் எரிவாயுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது,

இதன்படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 3,835
5 கிலோ சிலிண்டர் – ரூ. 1,535

திருத்தப்பட்ட விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலையை விடவும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகமாக சந்தையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: லிற்ரோ எரிவாயு விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கிறது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்