லிற்ரோ எரிவாயு விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கிறது

🕔 September 4, 2023

லிற்ரோ எரிவாயுவின் விலை – இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல்அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தைக் கூறினார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை மூவாயிரத்து 127ரூபாவாகும்.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ஆயிரத்து 256 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய ஆகிய எரிபொருள்கள் அனைத்தினதும் விலைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே தற்போது எரிவாயுவின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்கதக்து.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்